Madhampatty Rangaraj | Joy Crizilda|மாதம்பட்டி ரங்கராஜ் மனைவிக்கு கிரிசில்டா முதல் நெத்தியடி பதிலடி
மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை, ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என்று கூறி சில ஆதாரங்களை அவரது மனைவி ஸ்ருதி ரங்கராஜ் வெளியிட்டு, தனது கணவரை காப்பாற்றுவேன் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜாய் கிரிசில்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களின் வாழ்க்கையை அழிப்பவர்களை பாதுகாப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை உருகி உருகி காதலித்துவிட்டு தற்போது தான் மிரட்டுவதாக கூறுவதா? என்றும் வினா எழுப்பியுள்ளார்.