லாரி மோதி பறிபோன 30 உயிர்கள் -வரிசையாக கிடக்கும் உடல்கள்.. ரணமாக்கும் காட்சி
திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மோதியதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ராமநாதபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.. அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஆடுகளின் மீது மோதியதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.