Lizard பிரியாணியில் பல்லி - திட்டமிட்ட சதி என ஓட்டல் உரிமையாளர் புகார்

Update: 2025-05-30 02:45 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி இருந்ததாக கூறப்பட்ட புகாரில் சதித்திட்டம் உள்ளதாக கூறி, உணவகத்தின் உரிமையாளர் புகார் மனு அளித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உணவகத்திற்கு வந்த நான்கு பேர், உணவில் பல்லி கிடந்ததாக புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து உணவகத்தை தற்காலிகமாக மூட நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த உணவக உரிமையாளர், திட்டமிட்டே பல்லியை உணவில் கலந்துள்ளதாகவும், அதற்கான சிசிடிவி ஆதாரத்தையும் அளித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

ப்ரீத் - தனியாக ஒருநபர் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி உள்ளது. அதை பயன்படுத்தவும்

Tags:    

மேலும் செய்திகள்