Liquor | Chengalpattu | 10 மாதம் சுமந்து பெற்ற தாயை பஸ்பமாக்கிய அரக்கன் - ஊரையை நடுங்க விட்ட சத்தம்
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாய் - தீ வைத்து எரித்த மகன்
சென்னை செங்கல்பட்டில் மது அருந்த பணம் தராததால், பெற்ற தாயை மகனே தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் பகுதியை சேர்ந்த விக்டர் ராஜேந்திரன் என்பவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது தாய் எஸ்தர் மது வாங்க பணம் தராததால், ஆத்திரமடைந்த விக்டர் ராஜேந்திரன், மண்ணெண்ணெயை ஊற்றி அவரை தீ வைத்து எரித்துள்ளார். எஸ்தரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து மதுவுக்காக தாயை கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.