"ஹாஸ்பிடல்லயே வாழ்க்கை போகுது!" | கண்ணீர் மல்க கோரிக்கை பழம்பெரும் நடிகர்
புற்றுநோயால் பாதித்த பழம்பெரும் துணை நடிகர் - உதவுமாறு கோரிக்கை
ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் துணை நடிகர் செல்லப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனக்கு உதவுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வட பழனி ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. 63 வயதான இவர் ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம், சத்யராஜ் நடித்த வில்லாதி வில்லன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராகவும், ஆர்ட் டைரக்டர் ஆகவும் பணியாற்றி உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு செல்லப்பாவிற்கு வாய் புற்றுநோய் ஏற்பட்ட நிலையில், கடந்த 3 வருடங்களாக பல்வேறு மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனாதை போல் அலைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.