எல்.ஐ.சி-யின் 69-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
சென்னையில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 69-வது ஆண்டு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின், 69-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை எல்.ஐ.சி-யின் தென் மண்டல மேலாளர் முரளிதர், நிறுவன கொடி மற்றும் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, ஜெயா ஐ கேர் சென்டரின் கண் மருத்துவர் கணேஷ் மற்றும் ஹைடெக் ஃபாப்ரிகேட்டர் பிரைவேட் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகரன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.