வருமானத்தில் சாதனை படைத்த லீகோ
பிரபல பொம்மை நிறுவனமான லீகோ நிறுவனம் தனது முதல் அரையாண்டு விற்பனையில், இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. டென்மார்க்கை தலைமையிடமாக கொண்டு உலகமுழுவதும் பொம்மைகளை விற்பனை செய்து வரும் லீகோ, 2025ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் , லீகோ கட்டைகளை வைத்து செய்யும் பூ மற்றும் காரின் விற்பனை, இதுவரை காணாத அளவில் ஏற்றம் கண்டும், அதிக அளவிலான லாபத்தையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு, போக்கிமானுடன் இணைந்து பொம்மை தயாரிக்கபோகும் லீகோ, இன்னும் அதிகப்படியான லாபம் ஈட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.