வழக்கறிஞராக இருந்து கொண்டு காரில் ஆட்டை ஆட்டைய போட்டவர் - திருடும் வீடியோ வைரல்
காரில் ஆடு திருடிய வழக்கறிஞர் - பரபரப்பு காட்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆடு திருடிய வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலால் நகர் ஏரிக்கரையைச் சேர்ந்த அஞ்சலை என்பவரின் செம்மறி ஆடு திருடப்பட்டது. இது குறித்து அஞ்சலை அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுல்தான் மற்றும் அவரது நண்பர் திருமலையை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சுல்தான் ஆட்டை காரில் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.