நிலமோசடி விவகாரம்... அரசியல் புள்ளி அதிரடி கைது - ராசிபுரத்தில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தவணை முறையில் நிலம் விற்பணை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அதிமுக நகர செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டுமனை விற்பனை செய்வதாகக் கூறி 500-க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் தவணை முறையில் தலா ஒன்றரை லட்சம் வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன் மற்றும் பழனிவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனிவேலை தேடி வருகின்றனர்.