Kumbakonam | TNEB | "இனி கவலையில்லை.." கும்பகோணம் மக்களுக்குகுட் நியூஸ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பூமிக்கு அடியில், மின்சார புதை வழித்தடத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் வருடம்தோறும் நடைபெறும் தேரோட்டத்தின்போது மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழக அரசு மின்சார புதை வழித்தடத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு,பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.