கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகத்தில் உள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டுள்ளது. தனது அறையில் ரகசிய கேமரா பொருத்தியது யாரென தெரியவில்லை என கூறியுள்ள கிருஷ்ணமூர்த்தி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.