Krishnagiri | Crime | டூவீலரில் படுஜோராக நடக்கும் மது விற்பனை| தீயாய் பரவும் வீடியோ | District News
கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் இருசக்கர வாகனங்களில் சென்று மதுவிற்பனை செய்துவருவதாகவும் அரசு மதுபான கடையில் பாட்டில்களை வாங்கி, கூடுதல் விலைக்கு ஜி பே, போன் பே, வசதியுடன் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையில், 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.