Krishnagiri | தாயை தேடி ஸ்கூலுக்கு வந்த குட்டி யானை.. "ஐ.. அங்க பாருடா.." துள்ளிக்குதித்த மாணவர்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தாயை பிரிந்த 4 வயதுள்ள குட்டி யானை ஒன்று தனியார் பள்ளி அருகே சுற்றித்திரிந்தது. தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாரசந்திரம் கிராமத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானையை கண்டு பள்ளி மாணவர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர். பின்னர் தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையை அருகிலிருந்த வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். மேலும் குட்டி யானையை தாய் யனையுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.