Kovalam | கோவளம் கடற்கரைக்கு கிடைத்த அங்கீகாரம் - ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பெருமை

Update: 2025-11-12 04:41 GMT

5வது முறையாக நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கோவளம் கடற்கரை

சென்னையில் உள்ள கோவளம் கடற்கரைக்கு, தொடர்ச்சியாக 5வது முறையாக நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரையின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, நீரின் தரம் மற்றும் சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட 33 சர்வதேச தர நிலைகளை பொறுத்து, டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையால், நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரத்தை 5வது முறையாக, கோவளம் கடற்கரை பெற்றுள்ளது தமிழகத்திற்கு பெருமை அளிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்