கோவை மத்திய சிறையில் இருக்கும் கைதி தன்னுடைய உயிருக்கு ஆபத்து என உறவினர்களிடம் வீடியோ காலில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சிறையில் விசாரணை நடத்தி வருவதாக சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி விக்ரம் என்பவர் பேசும் வீடியோவில், தன்னுடன் சிறையில் இருந்த நபரை கொன்று விட்டார்கள் என்றும், தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு குறிப்பிட்ட நான்கு பேர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.