கோவை ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நாட்டு மாட்டு சந்தை நிறைவு பெற்றது. தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில், நடைபெற்ற தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழாவில் கடந்த 11 நாட்களாக தோல் பாவை, கூத்து, வள்ளிகும்மி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிலும் புவிசார் குறியீடு பெற்ற 20க்கும் மேற்பட்ட பொருட்களின் விற்பனை நடைபெற்றது.