"பைப்ல கட்டி வச்சு.. சுட்டுடுவேன்னு மிரட்டுனாங்க" - இளைஞர் பரபரப்பு புகார்

Update: 2025-03-06 09:17 GMT

கோவை தீத்திபாளையத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதன் ஆகியோர் மீது சந்தன மரம் வெட்டிய புகாரில் மதுக்கரை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வடவள்ளி போலீசார், வீட்டிலிருந்த விஜய் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி, மிரட்டியதாக அவர் புகார் அளித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடுப்பத்தினருடன் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்