கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 245ற்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கானது, உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இதுவரை 245க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜிடம் வெளிநாட்டில் இருந்து பேசியவர் யார் என்பதை தெரிந்து கொள்ள, இண்டர்போல் உதவியை நாடியுள்ள நிலையில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.