"கிங்டம் திரைப்படம் தடை செய்ய வேண்டும்" நா.த.கவினர் கைது

Update: 2025-08-06 13:57 GMT

புதுக்கோட்டையில் கிங்டம் திரைப்படம் வெளியான திரையரங்கை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படத்தில், இலங்கை தமிழர்களை அநாகரிகமாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என, நாம் தமிழர் கட்சினர் 30-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி வி.எஸ்.திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக கூறி அவர்களை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்