கிளாம்பாக்கம் மெட்ரோ பணி - ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு

Update: 2025-09-04 03:55 GMT

ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு எதற்கு தெரியுமா..?

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்க்காக ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் வரையான வழித்தடத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 15.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது. இந்த வழித்தடங்களில் 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மெட்ரோ ரயில் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக, ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்