Kavin Murder Case | கவின் ஆணவக்கொலை கைதிகளுக்கு சிறையில் என்ன நடந்தது? பரவும் பரபரப்பு தகவல்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதாக வெளியான தகவலை சிறை கண்காணிப்பாளர் மறுத்தார். பாளையங்கோட்டை சிறையில் உள்ள முன்னாள் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், எஸ்ஐ சரவணன் மற்றும் அவரது மகன் சுஜித் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்த சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், சிறையில் அனைவருக்கும் ஒரே சமையலறை இருப்பதாகவும், இதை நீதிபதிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் எஸ்ஐ சரவணன் ஆகியோர் ஏ-கிளாஸ் ஒதுக்கீட்டின்படி சிறப்பு அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.