சா`தீ’யில் வெந்த கவின் - காயம் ஆறாத தமிழகம்

Update: 2025-08-02 02:29 GMT

நெல்லையில் வெட்டிக் கொல்லப்பட்ட கவின் உடல் சொந்த ஊரில் தகனம்

நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல், 5 நாட்களுக்குப் பிறகு அவருடைய சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது. ஐடி ஊழியர் கவின், பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் சரணடைந்த நிலையில், சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து கவினின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு நாட்ங்களுக்கு முன்பு சுர்ஜித்தின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், கவினின் பெற்றோர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, கவின் உடல் அவருடைய சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு அவருடைய இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டது. அங்கு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட், தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மலர் வளையம் வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், கவினின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்