கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தோகைமலை அருகே மாலைமேடு பொம்முசாமி மாலையம்மன் கோயிலில், இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பொங்கல் வைக்க வெவ்வேறு நேரங்களை காவல்துறை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் சின்னபொம்மாநாயக்கர் தரப்பினர் பொம்முசாமி மாலை கோயிலுக்கு புறப்பட்டுள்ளனர். இதையறிந்த போலீசார் குப்பமேட்டுப்பட்டியில் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.