KARUR | அறநிலையத்துறைக்கு எதிராக போராட திரண்ட மக்கள்; கரூரில் பரபரப்பு

Update: 2025-11-27 10:57 GMT

கரூர் வெண்ணைமலையில் இட பிரச்சனை தொடர்பாக அறநிலையத் துறையைக் கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஜோதிமணி எம்.பி. பங்கேற்றார். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு, கடைகளை இடிக்க நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சீல் வைக்கும் பணியில் அறநிலையத் துறையினர் ஈடுபடவுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு ஆதரவாக வந்த எம்.பி. ஜோதிமணியிடம் பெண்கள் முறையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்