Karur | lorry | லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்... கரூர் அருகே பரபரப்பு
லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்... கரூர் அருகே பரபரப்பு
கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். மண்மங்கலம் பகுதியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் லாரியை பின் தொடர்ந்து மடக்கி பிடித்துள்ளார். இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பிடிபட்டது என்பதால், பரமத்தி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து லாரி ஒப்படைக்கப்பட்டது.