Karaikkal student death|குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்."உன் தம்பி வந்திருக்கான்டா எந்திரிடா"
Karaikkal student death || ஆற்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்.."உன் தம்பி வந்திருக்கான்டா எந்திரிடா" - கதறி துடிக்கும் குடும்பம்
காரைக்காலில் உள்ள திருநள்ளார் அகலங்கண்ணு ஆற்றில் குளிக்க சென்ற அரசு கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் தலத் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் நித்தின் பிரியன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் அகலங்கண்ணு ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நித்தின் பிரியன் நீரில் வழுக்கி விழுந்து தத்தளித்துள்ளார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு போராட்டத்திற்கு பிறகு நித்தின் பிரியனை சடலமாக மீட்டனர். அப்போது பெற்றோர் மகனின் உடலை கண்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.