நள்ளிரவில் மாயமான 2 பள்ளி மாணவிகள்..கன்னியாகுமரியை கதிகலங்க வைத்த சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலச்சல் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இரவு பாட்டியுடன் தூங்கிய சிறுமிகளை நள்ளிரவில் காணவில்லை என தெரிகிறது. இது குறித்து தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து மாயமான சிறுமிகளை தேடி வருகின்றனர்.