குமரியில் இளைஞருக்கு மரணத்தை கொடுத்த ``மரண பாறை'' - அந்த பக்கம் போனா உஷாரா இருங்க மக்களே
குமரியில் கடல் அலை இழுத்து சென்று மாயமான நபர் சடலமாக மீட்கபட்டுள்ளார். விஜய் என்ற சுற்றுலா பயணி காந்தி மண்டபம் அருகே கடலில் அமைந்துள்ள மரண பாறையில் தடையை மீறி செல்பி எடுத்தபோது கடல் அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கி மாயமானர். உடன் வந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் , கடலில் மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் விஜயை சடலமாக மீட்டனர்.தொடர்ந்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.