Kanniyakumari | காதலித்து ஏமாற்றி கூட்டு பலாத்காரம்.. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..

Update: 2025-11-24 06:40 GMT
  • கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி கூட்டு பலாத்காரம் - இருவர் கைது
  • கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி, கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவான 2 இளைஞர்களை போலீஸார் தஞ்சையில் கைது செய்தனர். கல்லூரி மாணவிக்கு, அஜீன் என்பவருடன் காதல் ஏற்பட்ட நிலையில் தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்த அஜீனின் நண்பர் சஜின் ராஜ், கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அஜீன், சஜின் ராஜ் இருவரும் அப்பெண்ணை மிரட்டி, கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் தற்கொலைக்கு முயன்ற போது, உண்மை தெரிய வந்தது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் புகாரளித்த நிலையில், போலீஸார் 2 இளைஞரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.     
Tags:    

மேலும் செய்திகள்