Kanchipuram | கை, கால் செயலிழந்த தந்தையை ஃபேன் றெக்கையால் அடித்து கொன்ற கொடூர மகன்
காஞ்சிபுரம் நந்தம்பாக்கத்தில், கை கால் செயலிழந்த தந்தையை, மதுபோதையில் ஃபேன் றெக்கையால் மகன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மதுவிற்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்திற்கு சென்று வந்தவர் என்றும், சிகிச்சையின் போதே மது அருந்தியதால் மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிட்டார்.