Kanchipuram | ரத்தம் தெறிக்க சரமாரியாக விழுந்த வெட்டு - மியூசிக்கால் நேர்ந்த பயங்கரம்
Kanchipuram | ரத்தம் தெறிக்க சரமாரியாக விழுந்த வெட்டு - மியூசிக்கால் நேர்ந்த பயங்கரம்
சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு- இளைஞர்களுக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம் அருகே சப்தமாக பாடல் கேட்டதை தட்டிக் கேட்ட அண்ணன், தம்பியை அரிவாளால் தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு வீட்டுக்கு எதிரே வசித்தவர்கள் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டனர். இதை டில்லி பாபுவும், அவரது அண்ணன் சங்கரும் தட்டிக் கேட்டபோது எதிர் வீட்டில் இருந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா போதையில் டில்லி பாபுவையும் சங்கரையும் அரிவாளால் வெட்டியதுடன் அவரது மனைவி மற்றும் தாயையும் தாக்கினார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.