கோயம்பேட்டில் அகற்றப்பட்ட காமராஜர் பேனர் - வியாபாரிகள் முடிவால் மன்னிப்பு கேட்ட அதிகாரி
கோயம்பேடு சந்தையில் காமராஜர் பேனரை அகற்றியதால் வியாபாரிகள் நடத்திய போராட்டம், அதிகாரி மன்னிப்பு கேட்டதால் கைவிடப்பட்டது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி வியாபாரிகள் சார்பில் காமராஜர் புகைப்படங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை மார்க்கெட் நிர்வாகமான எம்.எம்.சி எந்த முன்னறிவிப்பும் இன்றி அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து வியபாரிகள் இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மன்னிப்பு கூறினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் திமுக எம்பி திருச்சி சிவா காமராஜர் ஏசி அறையில் தான் தங்குவார் என அவதூறு பரப்பி உள்ளார் எனவும் இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர்.