கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடிசித்தூரை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கும், கொளஞ்சியப்பனுக்கும் ஏற்கனவே வீடு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த கொளஞ்சியப்பன், மண்வெட்டியை எடுத்து மகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரில் கொளஞ்சியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.