இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்ட பெண் திடீரென மாலையோடு வந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன், உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்ட பெண் கழுத்தில் மாலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிறுபனையூரை சேர்ந்த காதர்பீ-க்கு சொந்தமான இடத்தை, அவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்து வேறொரு நபர் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில், சங்கராபுரம் வட்டாட்சியர் சான்றிதழ் அளித்ததால் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் காதர்பீ தர்ணா செய்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமென வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.