நிற்காமல் சென்ற பேருந்தை பிடித்து தேர்வெழுதிய +2 மாணவிக்கு ஸ்கூட்டி பரிசு கொடுத்த கடுக்காய் படக்குழு
நிற்காமல் சென்ற அரசு பேருந்தை ஓடிச் சென்று பிடித்து தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி சுஹாசினிக்கு 'கடுக்கா' பட குழுவினர் ஸ்கூட்டி ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.
விஜய் கௌரிஷ்' கதாநாயகனாக அறிமுகமாகும் "கடுக்கா" திரைப்படத்தின் மூன்றாவது ப்ரோமோ வீடியோவை பட குழுவினர் வெளியிட்டனர். அந்த புரோமோ வீடியோவை சிறகடிக்க ஆசை சீரியலின் நடிகை நடிகை ஸ்ருதி நாராயணன் வெளியிட்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூரில் கடந்த மார்ச்.25-ல் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை ஓடிச் சென்று பிடித்து தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி சுஹாசினி 437 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், படக்குழுவினர் அந்த மாணவிக்கு scooter ஒன்றை பரிசாக அளித்தனர்.