JUSTIN | விஷவாயு தாக்கியதில் பலி - திருச்செந்தூரில் அதிர்ச்சி

Update: 2025-06-08 07:22 GMT

திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்ததில் விஷவாயுத்தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி. சாக்கடை அடைப்பை சரி செய்ய இறங்கிய போது பரிதாபம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளைய தினம் வைகாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் சுற்றி உள்ள இடங்களில் பாதாள சாக்கடைகள் எந்தெந்த பகுதிகளில் வெளியே வருகின்றதோ அதனை உடனடியாக சரி செய்வதற்காக திருச்செந்தூர் நகராட்சி சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நகராட்சி முழுவதும் சுற்றி எந்த பகுதியில் பாதாள சாக்கடை வெளியேறிகிறதோ அதனை உடனடியாக திறந்து சரி செய்து அதனை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளியாக கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மணி என்ற 40 வயது தொழிலாளி ஒப்பந்த தொழிலாளியாக இன்று பணியில் இருந்து வந்துள்ளார்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பின்புறம் பாதாள சாக்கடை வெளியேறி வருவதாக அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது குழுவினருடன் சாக்கடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணியின் உடலை மீட்டனர். ஆனால் அவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் பிரேத பரிசோதனைக்காக இறந்த மணியின் உடலை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த தொழிலாளி உடலை மருத்துவமனை முன்வாசல் வழியாக கொண்டு செல்லாமல் பின்னால் உள் சுவற்றை தாண்டி கொண்டு எடுத்து சென்ற போது உடலை தீயணைப்பு துறையினர் கீழே தவறவிட்டனர். இதானல் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒப்பந்த பணியாளர் பாதாள சாக்கடை திட்டத்தில் விழுந்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் தெரிவித்த ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்