சென்னை நோக்கி வந்த JP நட்டா கார் திடீர் பழுது - பின்னால் அடுத்தடுத்து விபத்து
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பயணித்த கார் திடீரென பழுதானதால் பின்னால் வந்த இரண்டு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்த நிலையில், வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு டெல்லி செல்வதற்காக சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜெ.பி.நட்டா பயணித்த கார் திடீரென பழுதானதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் வேகமாக வந்த இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி லேசான விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு ஜெ.பி.நட்டா புறப்பட்டுச் சென்றார்.