Jharkhand | திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடன்.. காலையில் பூசாரி கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2025-07-16 15:39 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோயிலுக்கு திருட சென்ற போது, அசதியில் அங்கேயே படுத்து தூக்கிய திருடனை போலீசார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் பகுதியில் உள்ள காளி கோயிலில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடன் கோயிலில் இருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள், கிரீடம் உள்ளிட்ட பொருட்களை திருடி மூட்டையாக கட்டியுள்ளான். அசதியாக இருந்ததால் சற்று ஓய்வெடுத்த திருடன் இரவு முழுவதும் கோயிலில் தூங்கியுள்ளான். காலையில் கோவில் பூசாரி அளித்த தகவலின் பேரில் திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்