ஜெயலலிதா பிறந்தநாள் - அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Update: 2025-03-11 02:09 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, சென்னை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் நடிகை விந்தியா ஆகியோர் மூவாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சென்னை புறநகர் அதிமுக மாவட்டம் ஆலந்தூர் தொகுதி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமை தாங்கிய நிலையில், அதிமுக புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் லட்சுமிகாந்தன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுமார் 2,000 பெண்களுக்கு புடவை, 200 பேருக்கு வேட்டி, 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை உள்ளிட்டவற்றை நடிகை விந்தியா மற்றும் கே.பி.கந்தன் ஆகியோர் இணைந்து வழங்கினர். தொடர்ந்து, 12 மாணவர்களுக்கு சைக்கிள், வியாபாரிகளுக்கு அயன் பாக்ஸ், இட்லி சட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட், ஹாக்கி, கேரம் மற்றும் பல்வேறு விளையாட்டுகளுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்