பிறக்கும் குழந்தைகளுக்கு அடித்த ஜாக்பாட் | 3 வயது வரை ரூ.1.30 லட்சம் நிதியுதவி
சீனாவில் பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் ரூ.1.30 லட்சம் நிதியுதவி
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு 3 வயது வரை ஆண்டு ஒன்றுக்கு 44 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் குழந்தை ஒன்றுக்கு தலா ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்வதில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டாததால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை சரி செய்ய இந்த புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.