சென்னையில் பகுஜன் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜி கௌதம்,முன்னாள் எம்.பி ராஜாராம் ஆகியோர் தமிழகம் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென திரண்ட 500க்கும் மேற்பட்ட பகுஜன் கட்சியினர் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கௌதமை நேரில் சந்தித்தனர். தற்போதைய மாநில தலைவர் ஆனந்த், கட்சியின் மூத்த நிர்வாகிகளை வெளியேற்றி வரும் நிலையில், புதிய மாநில தலைவராக திருமதி ஆம்ஸ்ராங்கை நியமிக்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும், ரிசார்ட்டிற்கு வருகை தந்த திருமதி ஆர்ம்ஸ்ராங் தற்போதைய தலைவர் ஆனந்த் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக தேசிய ஒருங்கிணைப்பாளரிடம் குற்றம்சாட்டினார்.