Iridium Scam | "1 லட்சம் முதலீடு செய்தால் 1 கோடி.." | தமிழ்நாடு முழுதும் கோடிகளை சுருட்டிய கும்பல்

Update: 2025-09-13 12:16 GMT

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், இரிடியம், டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என பலரிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதற்காக பாரத ஸ்டேட் வங்கி முத்திரை பதித்த ஆவணங்களை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் 50 நெட்வொர்க் மூலம் சாமிநாதன் முதலீடுகளை பெற்றுள்ளார். இந்த மோசடி வழக்கில் அவரது மனைவி மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்