IND vs PAK "மத்தியஸ்தம் செய்ய டிரம்பிடம் யார் கேட்டார்கள்?" ராகுல் காந்தி அதிரடி கேள்வி

Update: 2025-05-24 02:54 GMT

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "மத்தியஸ்தம்" செய்ய டிரம்பிடம் யார் கேட்டார்கள்? என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக ராகுல்காந்தி கேள்விகளை முன் வைத்துள்ளார். பாகிஸ்தானை கண்டிப்பதில், ஒரு நாடு கூட ஏன் நம்மை ஆதரிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "மத்தியஸ்தம்" செய்ய டிரம்பிடம் யார் கேட்டார்கள்? என்பதை ஜெய்சங்கர் விளக்குவாரா என்றும் கேட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்