தேனி பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அதிகரித்த நீர்வரத்து - தடையை மீறி குளித்த சிறுவர்கள்

Update: 2025-05-26 02:30 GMT

Theni | தேனி பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அதிகரித்த நீர்வரத்து - தடையை மீறி குளித்த சிறுவர்களால் பரபரப்பு

தேனி போடி அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளித்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், போடியை சுற்றியுள்ள கண்மாய்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இப்பகுதியில் குளிக்க பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறியும் சில சிறுவர்கள் குளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்