"எந்த படத்துல அவங்க என்ன நடிக்க வச்சாங்க..?" வீரலட்சுமி மீது மநீம பெண் நிர்வாகி புகார்

Update: 2025-07-31 05:48 GMT

எந்த படத்துல அவங்க என்ன நடிக்க வச்சாங்க.." வீரலட்சுமி மீது மநீம பெண் நிர்வாகி புகார்

பிரபலம் அடைவதற்காக தன்னை பற்றி தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனர் வீரலட்சுமி அவதூறான கருத்துக்களை பரப்பியதாக மக்கள் நீதி மய்ய நிர்வாகி சினேகா மோகன் தாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட மோதல் விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், வீரலட்சுமி மீது சினேகா மோகன் தாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், வீரலட்சுமி தனக்கு யார் என்றே தெரியாது எனவும் நான் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இது போன்று ஆட்டோ ஓட்டுனருடன் மோதலை ஏற்படுத்தி பிரபலமடைய நினைப்பதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்