போக்சோ வழக்கில் கைதான `நர்ஸிங் கல்லூரி முதல்வர்' கோர்ட் கொடுத்த தண்டனை இத்தனை வருஷம் சிறையா?
போக்சோ வழக்கு நர்சிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு சிறை
கரூர் மாவட்டம் குளித்தலையில் போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குளித்தலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கடந்த 2022ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு
23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.