Cement factory open || அரக்கோணத்தில் FLSMIDTH சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆலை திறப்பு
அரக்கோணத்தில் FLSMIDTH சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆலை திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில்,
சிமெண்ட் உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்களை உருவாக்கும் சிமெண்ட் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது.
திருவாலங்காடு - சென்னை நெடுஞ்சாலையில் FLSMIDTH நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட சிமெண்ட் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆலை திறப்பு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய நிர்வாக கட்டிடங்கள் திறக்கப்பட்டன. நிறுவனத்தின் பெயர் பலகை மற்றும் நிறுவனத்தின் மாதிரி வடிவ அமைப்பை குளோபல் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டோபர் பவுல் திறந்து வைத்தார். முன்னதாக, கிறிஸ்டோபர் பவுல், மேனுவல் சேவியர் மற்றும் ஸ்ரீராம் மனோஜ் மெய்யப்பன் உட்பட பலர் குத்துவிளக்கு ஏற்றினர்.
இவ்விழாவில், நிறுவனத்தின் தலைவர் வெங்கடேஷ் ஜெயராமன், மேனுஃபேக்சர் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு சிமெண்ட் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.