``எங்க அண்ணன என்கவுன்ட்டர் பண்ணிடுவாங்கன்னு பயமா இருக்கு'' - கண்ணீர்மல்க பேசிய தங்கை
ஸ்ரீபெரும்புதூரில், சிறையில் இருந்து ஜாமினில் வந்த ரவுடி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என்று குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். கீவேளூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர், பிரபல ரவுடி எபினேசர் கொலை வழக்கில் சிறைக்கு சென்று, ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஆனால், வெளியே வந்த உடனேயே போலீசார் கைது செய்துள்ளதாகவும், எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை என்றும் சீனிவாசனின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்களோ என்று அச்சம் தெரிவித்துள்ள சீனிவாசனின் குடும்பத்தினர், அவரை எங்கு வைத்துள்ளார்கள் என்று போலீசார் தெரிவிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.