"இன்னும் 2, 3 மாநாடு நடத்தினால்.." "விஜய் காலி டப்பா.."அமைச்சர் அட்டாக்
இன்னும் 2 மாநாடு நடத்தினால் தவெக தலைவர் விஜயின் சாயம் வெளுத்துவிடும் என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார். சென்னை பூங்கா நகர் கந்தக்கோட்டம் பகுதியில் உள்ள முத்துக்குமாரசாமி கோயிலில் இருந்து அறுபடை வீடுகளுக்கு முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயின் மாநாடு தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தார்.