"இது மட்டும் நடந்தா.." - முதல்வரிடம் கோரிக்கை வைத்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தினருக்கு மருத்துவக் காப்பீடு, நலிந்த கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் பரத் தகவல் தெரிவித்து உள்ளார். 27 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக, ஒரே அணியைச் சேர்ந்த 23 பேர் கூட்டாக அந்த சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னையில் அந்த சங்கத்தினர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.